கணித `பாட'கர் டி.எம்.எஸ்
`கவிஞன் நானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்'
என்று தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார் கவிஞர் கண்ணதாசன்.சென்னையில் ஒரு மனிதக் கணிதம், பல காவிய காலங்களை உருவாக்கப்போகும் அடுத்த தலைமுறையை சரியாக செப்பனிட்டுக்கொண்டிருக்கிறது.

கமலுடன் ஒரு மாலை
எனக்கும் கமல்ஹாசனுக்கும் சுமார் முப்பதாண்டு நட்பு உண்டு. அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு இல்லையென்றாலும்,ஒவ்வொரு சந்திப்பின்போதும்.அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில புதுப்பித்து கொண்டிருப்பது தெரியும்.இத்தனை படங்கள் நடித்து ஒரு இமாலய இடத்திற்கு போயிருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தன் முதல் படமான இன்றும் நினைக்கிற அவருடைய தொழில் வெறி பிரமிக்க வைக்கும்.
அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். என் வலைப்பதிவை புதிதாக மாற்றி அமைத்திருக்கிறேன். உங்கள் எண்ணங்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.